சினிமா
ராகுல் ராம கிருஷ்ணா

சிறு வயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் - தெலுங்கு நடிகர் தகவல்

Published On 2020-01-21 17:56 IST   |   Update On 2020-01-21 17:56:00 IST
அர்ஜுன் ரெட்டி படம் மூலம் அறிமுகமான நடிகர் சிறுவயதில் பாலியல் தொல்லைக்கு ஆளானேன் என்று கூறியிருக்கிறார்.
தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர நடிகராக இருப்பவர் ராகுல் ராம கிருஷ்ணா. அர்ஜுன் ரெட்டி படத்தில் அறிமுகமான இவர், இயல்பான நடிப்பால் மொழிகள் கடந்து ரசிகர்களைப் பெற்றார். அடிப்படையில் பத்திரிகையாளரான இவர் அர்ஜுன் ரெட்டி வெற்றியைத் தொடர்ந்து பரபரப்பான நடிகரானார்.

பரத் அனே நேனு, சம்மொஹனம், கீதா கோவிந்தம், கல்கி, புரோ செவ்ரா போன்ற திரைப் படங்களில் முக்கியமான கதாபாத்திரத்தில் தோன்றிய ராகுல், சமீபத்தில் அல்லு அர்ஜுனுடன் வைகுண்ட புரம்லோ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில், சிறுவயதில் தான் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளானதாகக் குறிப்பிட்டிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது:-



நான் சிறு வயதில் பாலியல் வன்புணர்வுக்கு ஆளானேன். இந்த சோகத்தை பற்றி வேறு என்ன சொல்வது என்று தெரியவில்லை. என்னைப் பற்றி தெரிந்துகொள்ள நினைக்கும்போது எல்லாம் எனக்கு இதுதான் கண்முன் வருகிறது. இவ்வாறு அவர் பதிவு செய்திருக்கிறார்.

அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகை சேர்ந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறும் விதமாகப் பதிவிட்டு வருகின்றனர்.

Similar News