சினிமா
விஜய் சேதுபதி

விஜய் சேதுபதி படத்தில் குடியுரிமை விவகாரம்

Published On 2019-12-19 13:15 GMT   |   Update On 2019-12-19 13:07 GMT
வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகும் படத்தில் குடியுரிமை விவகாரம் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்து உருவாகும் படம் யாதும் ஊரே யாவரும் கேளிர். இந்த படத்தின் மூலம் எஸ்.பி.ஜனநாதனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த வெங்கட கிருஷ்ண ரோகாந்த் இயக்குநராக அறிமுகமாகிறார். இதில் நாயகியாக மேகா ஆகாஷ், வில்லனாக மகிழ் திருமேனி நடித்து வருகிறார்கள். இவர்களுடன் ரகு ஆதித்யா, விவேக், மோகன் ராஜா, கனிகா, ரித்விகா, சிவரஞ்சனி உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். 

விஜய் சேதுபதி இசைக் கலைஞராக நடித்து வரும் இந்த படம் கிறிஸ்துமஸ், புத்தாண்டு, காதல், இசை என கொண்டாட்டங்களை உள்ளடக்கியது. கமர்சியல் படமாக உருவாகும் இதில் ஒரு சர்வதேச அளவிலான பிரச்சினையைப் பேசியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 



சந்திரா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் இசக்கி துரை இந்த படத்தைத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக நிவாஸ் கே பிரசன்னா, ஒளிப்பதிவாளராக மகேஷ் முத்துசுவாமி, கலை இயக்குநராக ஜான் பிரிட்டோ, எடிட்டராக சதீஷ் சூர்யா ஆகியோர் இந்த படத்தில் பணிபுரிந்து வருகிறார்கள். சமீபகாலமாக நாடு முழுவதும் பேசப்பட்டு வரும் குடியுரிமை பிரச்சினை தான் படத்தில் பேசப்பட்டுள்ள விவகாரம் என்கிறார்கள். படத்தின் பர்ஸ்ட் லுக் விஜய்சேதுபதியின் பிறந்தநாள் அன்று வெளியாக இருக்கிறது.
Tags:    

Similar News