சினிமா
ரசிகைக்கு ரஜினிகாந்த் வளையல் அணிவித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

கர்ப்பிணிக்கு வளைகாப்பு..... ரசிகையை நெகிழவைத்த ரஜினி

Published On 2019-12-16 10:28 GMT   |   Update On 2019-12-16 10:28 GMT
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த், தன்னை காண வந்த கர்ப்பிணி ரசிகை ஒருவருக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கியுள்ளார்.
சென்னை திருவல்லிக்கேணியை சேர்ந்த தம்பதிகள் ராகவா விக்னேஷ் - ஜெகதீஸ்வரி. இவர்கள் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர்களாவர். ஜெகதீஸ்வரி கர்ப்பமாக இருந்து உள்ளார். கர்ப்பமாக இருந்த மனைவியிடம், அவரது ஆசை குறித்து ராகவா விக்னேஷ் கேட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்தை பார்க்க வேண்டும் என ஜெகதீஸ்வரி கூறியுள்ளார். 



4-வது மாதம் முதலே ரஜினியை பார்ப்பதற்கு நேரம் கேட்க ராகவா விக்னேஷ் முயன்றுள்ளார். இதனை அறிந்த நடிகர் ரஜினிகாந்த், தன்னுடைய படப்பிடிப்பு நடந்து வரும் தளத்துக்கு தம்பதியரை வரவழைத்து சந்தித்துள்ளார். மேலும் நிறைமாத கர்ப்பிணியான ஜெகதீஸ்வரிக்கு வளையல் அணிவித்து ஆசி வழங்கியுள்ளார். 
Tags:    

Similar News