சினிமா
பாக்யராஜ்

பழமொழி சொல்லவே பயமா இருக்கு - பாக்யராஜ்

Published On 2019-12-13 07:39 IST   |   Update On 2019-12-13 07:39:00 IST
17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பேசிய பாக்யராஜ், பழமொழி சொல்லவே பயமாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன் சார்பில், 17-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா நேற்று கலைவாணர் அரங்கில் துவங்கியது. 19ம் தேதி வரை நடக்கும் விழாவில், 55 நாடுகளை சேர்ந்த, 130 திரைப்படங்கள் திரையிடப்படுகின்றன. இந்த விழாவிற்கு, தமிழக அரசு சார்பில் 75 லட்சம் ரூபாய் நிதியுதவி தரப்பட்டுள்ளது. முதல் படங்களாக, கொரிய படமான 'தி பாரசைட்' மற்றும் ஜெர்மன் படமான 'கண்டர்மான்' படமும் திரையிடப்படுகின்றன. 



முன்னதாக 17-வது சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட நடிகர் பாக்யராஜ் பேசியதாவது:- அதிமுக ஆட்சி தொடர வேண்டும் என பிரார்த்திக்கிறேன். திரைப்படத்துறைக்கு தமிழக அரசு அதிக நிதியுதவி வழங்கி வருகிறது. 'ஊசி இடம் கொடுக்காமல் நூல் நுழையாது' என சொல்லி சம்மன் வாங்கியதால் இப்போது பழமொழி சொல்லவே பயமாக இருக்கிறது என்று கூறினார். விழாவில் முக்கிய நிகழ்வாக தனது 90-வது வயதிலும் தொடர்ச்சியாகப் படங்களில் நடித்து வரும் சாருஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட உள்ளது.

Similar News