சினிமா
ஸ்வேதா பாசு

கணவரை பிரிந்தார் நடிகை ஸ்வேதா பாசு

Published On 2019-12-11 14:19 IST   |   Update On 2019-12-11 14:19:00 IST
தமிழ், தெலுங்கு படங்களில் நடித்துள்ள நடிகை ஸ்வேதா பாசு, திருமணமான ஒரு வருடத்தில் கணவரை பிரிந்து விட்டதாக கூறியிருக்கிறார்.
இந்தி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தேசிய விருது பெற்றவர் ஸ்வேதா பாசு. தமிழில் உதயா ஜோடியாக ரா ரா, கருணாஸ் ஜோடியாக சந்தமாமா படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்து இருக்கிறார். சில வருடங்களுக்கு முன்பு ஐதராபாத்தில் பாலியல் வழக்கில் ஸ்வேதா பாசு கைதான சம்பவம் பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் இந்தி பட இயக்குனர் ரோகித் மிட்டலுக்கும் ஸ்வேதா பாசுவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 13-ந்தேதி திருமணம் செய்து கொண்டனர். மகிழ்ச்சியாக நகர்ந்த இவர்கள் குடும்ப வாழ்க்கையில் ஒரு வருடத்திலேயே புயல் வீச தொடங்கி உள்ளது.



கணவரை பிரிந்து விட்டதாக ஸ்வேதா பாசு அறிவித்து உள்ளார். இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

“கணவர் ரோகித்தை நான் பிரிந்து விட்டேன். பல மாதங்களாக யோசனை செய்த பிறகே இந்த முடிவுக்கு நாங்கள் வந்தோம். பிரிய வேண்டும் என்ற முடிவை சேர்ந்தே எடுத்தோம். புத்தகத்தின் எல்லா பக்கங்களையும் படிக்க முடியவில்லை என்பதற்காக புத்தகம் மோசமாக இருக்கிறது என்று பொருள் அல்ல. ரோகித் எப்போதுமே என்னை ஊக்கப்படுத்தி வந்தார். அதற்காக அவருக்கு நன்றி. அவரை பற்றிய மறக்க முடியாத நினைவுகளும் எனக்குள் இருக்கும்.” இவ்வாறு ஸ்வேதா பாசு கூறியுள்ளார்.

Similar News