சினிமா
சாரா ஸ்ரவான்

நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய நடிகை கைது

Published On 2019-12-02 08:22 IST   |   Update On 2019-12-02 08:22:00 IST
நடிகரிடம் ரூ.15 லட்சம் கேட்டு மிரட்டிய வழக்கில் மராட்டிய நடிகை சாரா ஸ்ரவான் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
புனேவை சேர்ந்தவர் மராட்டிய நடிகை சாரா ஸ்ரவான். இவர் மராட்டிய நடிகர் சுபா‌‌ஷ் யாதவுடன் சேர்ந்து படம் ஒன்று நடித்தார். அந்த படம் வெளியான பிறகு சுபா‌‌ஷ் யாதவ் மீது சாரா ஸ்ரவான் பாலியல் புகார் அளித்தார். இதையடுத்து, சுபா‌‌ஷ் யாதவ் தனது செயலுக்காக சாரா ஸ்ரவானிடம் மன்னிப்பு கேட்டு அவரது செல்போனுக்கு வீடியோ ஒன்றை அனுப்பினார். 

இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்ட சாரா ஸ்ரவான், ரூ.15 லட்சம் தராவிட்டால் அந்த வீடியோவை அம்பலமாக்கி விடுவேன் என சுபாஷ் யாதவை மிரட்டினார். இதற்கிடையில் சாரா ஸ்ரவானின் தோழியான மற்றொரு மராட்டிய நடிகை இந்த வீடியோவை இணையத்தில் கசியவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த சுபா‌‌ஷ் யாதவ், பணம் கேட்டு மிரட்டியதாக நடிகை மீது போலீசில் புகார் அளித்தார். 



இதையடுத்து, இந்த வழக்கில் கைது ஆகாமல் இருக்க சாரா ஸ்ரவான், புனே கோர்ட்டில் முன்ஜாமீன் பெற்றார். இந்த நிலையில் சாரா ஸ்ரவானின் முன்ஜாமீன் மனுவை புனே கோர்ட்டு ரத்து செய்தது. அதனை தொடர்ந்து, நேற்று மும்பையில் இருந்த சாரா ஸ்ரவானை புனே போலீசார் கைது செய்தனர்.

Similar News