சினிமா
என்.எஸ்.கே. பிறந்தநாள் விழா

என்.எஸ்.கே.பிறந்தநாள் விழாவில் திரண்ட நகைச்சுவை நடிகர்கள்

Published On 2019-11-30 14:06 IST   |   Update On 2019-11-30 14:06:00 IST
மறைந்த நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்த நாளை நகைச்சுவை நடிகர்கள் தினமாக கலப்பை மக்கள் இயக்கம் கொண்டாடியது.
மறைந்த நடிகர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் பிறந்த நாளை நகைச்சுவை நடிகர்கள் தினமாக கலப்பை மக்கள் இயக்கம் கொண்டாடியது. இந்த விழாவிற்கு பாரதிராஜா தலைமை தாங்கினார்.

இதில் மூத்த நடிகை சி.ஆர்.சரஸ்வதி பேசியதாவது:-

திரைத்துறையில் சாதனை படைத்தோர்க்கு விழா எடுக்க ஒரு மனசு வேண்டும். என்.எஸ்.கே தான் மருத்துவமனையில் இருக்கும் கடைசி காலத்தில் கூட உதவி என்று வந்தவருக்கு தனது வெள்ளி செம்பை கொடுத்தவர். அப்படிப்பட்ட மகத்தான கலைஞனை ஞாபகப்படுத்துவது ஒட்டுமொத்த சினிமாவிற்கு செய்யும் தொண்டாகும்.

‘நகைச்சுவை என்பது நமது உடலை மனதை வாழ்க்கையை உற்சாகமாக வைப்பதாகும். என்.எஸ்.கே அவர்கள் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தவர். பொதுவாக நகைச்சுவை நடிகர்களின் வாழ்வில் பல சோகம் இருக்கும். அந்த சோகம் முகத்தில் தெரிந்தால் காமெடி டிராஜிடியாகி விடும். இவ்வளவு நகைச்சுவை நடிகர்கள் ஒரே இடத்தில் பார்ப்பது ஆச்சர்யமாக இருக்கிறது’

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் ரமேஷ் கண்ணா, பவர் ஸ்டார், பெஞ்சமின், ஆர்த்தி கணேஷ், சிசர் மனோகர் இசையமைப்பாளர்கள் சிற்பி, சுந்தர்.சி, சித்ரா லட்சுமணன், முத்துக்காளை, கிங்காங், லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன், போண்டாமணி, வெங்கல்ராவ் மற்றும் ஏராளமான நடிகர்கள் கலந்துகொண்டனர்.

Similar News