சினிமா
சந்தானம்

சந்தானத்துடன் டிக்கிலோனா விளையாடும் பிக்பாஸ் பிரபலம்

Published On 2019-11-29 17:07 IST   |   Update On 2019-11-29 17:07:00 IST
சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகி வரும் டிக்கிலோனா படத்தில் பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஒருவர் இணைந்து நடித்து வருகிறார்.
சந்தானம் நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் படம் டிக்கிலோனா. நடிகர் சந்தானத்தோடு சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அனகா மற்றும் ஷிரின் இருவரும் நாயகிகளாக நடிக்கிறார்கள். யோகிபாபு, ஆனந்த்ராஜ், முனிஷ்காந்த், மொட்டை ராஜேந்திரன், ஷாரா என காமெடி பட்டாளமே இப்படத்தில் நடிக்கின்றனர். 

இந்த கூட்டணியில் தற்போது மதுமிதாவும் இணைந்திருக்கிறார். இவர் டிக்கிலோனா படத்தில் வக்கீல் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மதுமிதா ஏற்கனவே சந்தானத்துடன் இணைந்து ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் நடித்திருந்தார். இப்படம் மதுமிதாவிற்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.



சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படத்தை கார்த்திக் யோகி இயக்குகிறார். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சத்தை மையப்படுத்தி உருவாகும் இப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டப்பாடி ஜே.ராஜேஷும், சோல்ஜர் பேக்டரி சார்பில் சினிஸும் தயாரிக்கின்றனர்.

Similar News