சினிமா
சௌந்தரராஜா

தூர் வாரிய கண்மாய் நிலையை கண்டு வேதனையடைந்த சௌந்தரராஜா

Published On 2019-11-28 20:31 IST   |   Update On 2019-11-28 20:31:00 IST
தமிழில் பல படங்களில் நடித்துள்ள நடிகர் சௌந்தரராஜா, தான் தூர் வாரிய கண்மாய் நிலையை கண்டு மிகவும் வேதனையடைந்திருக்கிறார்.
சுந்தரபாண்டியன், தர்மதுரை, பூஜை, ஜிகர்தண்டா, தெறி, பிகில் போன்ற படங்களில் நடித்த நடிகர் சௌந்தரராஜா, ஆகஸ்ட் மாதம் பனை விதைகளை நட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பேருந்து நிலையம் எதிரில் உள்ள கண்மாய் கரையை தூர்வாரி தனது மண்ணை நேசிப்போம் மக்களை நேசிப்போம் அறக்கட்டளையின் 2ம் ஆண்டு விழாவை முன்னிட்டு நடிகர் சௌந்தரராஜா பனை விதைகளை நட்டார்.



மூன்று மாதங்களுக்குப் பிறகு அங்கு சென்ற சௌந்தரராஜா, குப்பையால் சூழ்ந்திருப்பதை கண்டு மிகவும் வேதனை அடைந்திருக்கிறார். பனை விதைகள் நட்ட இடங்களே தெரியாதளவிற்கு இருப்பதாகவும் கூறியிருக்கிறார். மேலும் பொதுமக்கள் பலரும் இதுபோன்ற கண்மாய்களை சுத்தமாக வைத்திருக்கவும், அப்படி வைத்திருந்தால்தான் மழைக்காலங்களில் நீரை சேமிக்க முடியும் என்றும் கூறியிருக்கிறார். இது தொடர்பாக வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

Similar News