மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடித்து முடித்துள்ள ஆரவ், இனிவரும் படங்களில் ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க முன்னுரிமை தருவதாக கூறியுள்ளார்.
ஆக்ஷன் படங்களுக்கு முன்னுரிமை - ஆரவ்
பதிவு: நவம்பர் 28, 2019 08:33
ஆரவ்
சரண் இயக்கத்தில் ஆரவ் ஹீரோவாக அறிமுகமாகும் படம், மார்க்கெட் ராஜா எம்.பி.பி.எஸ். காவ்யா தாப்பர், நிகிஷா பட்டேல், ராதிகா நடித்துள்ளனர். வரும் 29 ந்தேதி வெளியாகும் இப்படம் குறித்து ஆரவ் கூறியதாவது: மார்க்கெட்டில் பலசாலியான தாதாவாக இருக்கும் எனக்குள் நோஞ்சான் ஆவி ஒன்று புகுந்துகொள்கிறது. பிறகு நான் என்ன ஆகிறேன் என்பது கதை.
நோஞ்சான் ஆவி யார் என்பது சஸ்பென்ஸ். சரண் கதை சொன்னபோது, ஆக்ஷனுக்கு அதிக முக்கியத்துவம் இருந்ததால், முன்கூட்டியே சண்டை பயிற்சி பெற்றேன். காவ்யா தாப்பர், நிகிஷா பட்டேல் ஆகியோருடன் காதல் காட்சிகளில் நடித்துள்ளேன். தற்போது பல படங்களில் ஹீரோவாக நடிக்கும் நான், ஆக்ஷன் ஹீரோவாக நடிக்க முன்னுரிமை தருகிறேன். என்றார்.
Related Tags :