சினிமா
கமல்ஹாசன் டாக்டர் பட்டம் பெற்றபோது எடுக்கப்பட்ட புகைப்படம்

கமல்ஹாசனுக்கு டாக்டர் பட்டம் - நடிகர் சங்கம் வாழ்த்து

Published On 2019-11-21 15:55 IST   |   Update On 2019-11-21 15:55:00 IST
ஒடிசாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற நடிகர் கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்து தெரிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- கமல்ஹாசன் திரைப்படத்துறையில் செய்த கலை சேவையை பாராட்டி ஒடிசா மாநிலம் செஞ்சுரியன் தொழில்நுட்ப மேலாண்மை பல்கலைக்கழகத்தின் சார்பில் அவருக்கு ஒடிசா மாநில முதல்-மந்திரி நவீன்பட்நாயக் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி கவுரவப்படுத்தி உள்ளார். கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற கமல்ஹாசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொள்கிறது.



திரையுலகில் நடிப்பிற்கு உதாரணமாக திகழும் அவருக்கு இந்த பட்டம் அளித்தது தமிழ்நாட்டிற்கும் தமிழ் கலைஞர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் உள்ளது. அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்த செஞ்சுரியன் பல்கலைக்கழகத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நன்றியினை தெரிவித்து கொள்கிறது. 

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Similar News