நடிகை நிவேதா பெத்துராஜ் டோலிவுட்டில் நடித்த படங்கள் அடுத்தடுத்து ஹிட் ஆனதால், அவருக்கு அங்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.
தெலுங்கில் கவனம் செலுத்தும் நிவேதா பெத்துராஜ்
பதிவு: நவம்பர் 20, 2019 21:52
நிவேதா பெத்துராஜ்
நிவேதா பெத்துராஜ் ஒரு நாள் கூத்து படத்தை தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு பிடிச்சவன், சங்கத்தமிழன் படங்களில் நடித்திருக்கிறார் . இந்நிலையில் தெலுங்கில் சித்ரலகரி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அடுத்து புரோசேவரெவருரா படத்தில் நடித்தார் அந்த படமும் ஹிட்டானது.
இதையடுத்து நிவேதாவுக்கு தெலுங்கில் படங்கள் குவிகின்றன. தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த காஜல் அகர்வால், நயன்தாரா, தமன்னா, சமந்தா, கீர்த்தி சுரேஷ் போன்றவர்கள் சமீபகாலமாக குறைந்த எண்ணிக்கையிலான படங்களிலேயே நடிக்கின்றனர். மகாநடி படத்தில் நடித்து தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷ் தற்போதைக்கு இந்தி படத்தில் கவனம் செலுத்துவதால் டோலிவுட்டில் போட்டி குறைந்திருக்கிறது.
அந்த வாய்ப்புகளை தற்போது நிவேதா, ராஷ்மிகா, ராசி கண்ணா, சாய் பல்லவி போன்றவர்கள் பகிர்ந்து வருகின்றனர். டோலிவுட்டில் தற்போது முன்னணி நடிகைகள் போட்டியில் இணைந்திருக்கும் நிவேதா பெத்துராஜ் அங்கு முன்னணி கதாநாயகியாக மாறி வருகிறார். அல்லு அர்ஜூன் நடிக்கும் அல வைகுந்தபுரமலோ, ராம் நடிக்கும் ரெட் போன்ற பெரிய ஹீரோக்கள் படங்களில் தற்போது ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
Related Tags :