ரஜினி பட வில்லன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் வரலாற்று படத்தில், உலக அழகி ஒருவர் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார்.
ரஜினி பட வில்லனுக்கு ஜோடியாகும் உலக அழகி
பதிவு: நவம்பர் 18, 2019 10:37
மனுஷி சில்லர்
உலக அழகி பட்டம் வென்ற இந்திய பெண்களான ஐஸ்வர்யாராய், பிரியங்கா சோப்ரா, லாராதத்தா, சுஷ்மிதா சென், யுக்தா முகி ஆகியோர் நடிகைகளாக மாறினர். ஐஸ்வர்யா ராய் தமிழில் இருவர், ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன் ஆகிய படங்களிலும், பிரியங்கா சோப்ரா தமிழன் படத்திலும் நடித்துள்ளனர். யுக்தாமுகி பூவெல்லாம் உன்வாசம் படத்தில் நடித்துள்ளார்.
சுஷ்மிதாசென் ரட்சகன் படத்தில் நடித்து இருக்கிறார். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடி உள்ளார். லாராதத்தா அரசாட்சி, டேவிட் படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இந்தியில் அதிக படங்களில் நடித்துள்ளனர். இந்த வரிசையில் 2017-ல் இந்தியா சார்பில் பங்கேற்று உலக அழகியாக தேர்வான மனுஷி சில்லாரும் நடிகையாகி உள்ளார். அரியானாவை சேர்ந்த இவர் இந்தியில் தயாராகும் பிருத்விராஜ் என்ற சரித்திர கதையம்சம் உள்ள படத்தில் அக்ஷய் குமார் ஜோடியாக நடிக்கிறார். இந்த படத்தை சந்திரபிரகாஷ் திவேதி இயக்குகிறார்.
12-ம் நூற்றாண்டில் இந்தியாவில் வடமேற்கு பகுதியை ஆண்ட மன்னர் பிருத்விராஜ் சவுகான் வாழ்க்கை வரலாறு படமாக இது தயாராகிறது. பிருத்விராஜ் சவுகான் வேடத்தில் அக்ஷய் குமாரும், சன்யோகிதா வேடத்தில் மனுஷி சில்லாரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு தொடங்கி உள்ளது. அடுத்த வருடம் தீபாவளிக்கு திரைக்கு வர உள்ளது. அக்ஷய் குமார், ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.