பிரபல இந்தி நடிகரும், 2.0 படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்ஷய்குமார், பீகார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.1 கோடி வழங்கி உள்ளார்.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கிய அக்ஷய் குமார்
பதிவு: அக்டோபர் 31, 2019 07:51
அக்ஷய் குமார்
பீகார் மாநிலத்தில் கனமழை பெய்து வருகிறது. தலைநகர் பாட்னாவில் ஒரு வாரம் தொடர்ந்து பேய் மழை கொட்டியதால் பெரிய சேதம் ஏற்பட்டு உள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகள் வெள்ளத்தில் மிதக்கின்றன. மக்கள் வீடுகளையும், உடமைகளையும் இழந்து தவிக்கிறார்கள்.
எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. ஆயிரக்கணக்கானோர் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்கள் படகு மூலம் மீட்கப்பட்டு வருகிறார்கள். வெள்ள பாதிப்புக்கு நிவாரண உதவிகள் குவிகின்றன.
பிரபல இந்தி நடிகரும், ரஜினிகாந்தின் 2.0 படத்தில் வில்லனாக நடித்தவருமான அக்ஷய்குமார் பீகார் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ரூ.1 கோடி வழங்கி உள்ளார். ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்பு அசாமில் ஏற்பட்ட மழை வெள்ள சேதத்துக்கு நிவாரண நிதியாக அக்ஷய்குமார் ரூ.2 கோடி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :