சினிமா
பட்லர் பாலு படத்தில் யோகிபாபு

யோகி பாபுவின் பட்லர் பாலு ரிலீஸ் தேதி அறிவிப்பு

Published On 2019-10-30 11:48 IST   |   Update On 2019-10-30 11:48:00 IST
தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வரும் யோகிபாபு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பட்லர் பாலு’ திரைப்படம் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
காமெடியில் கொடி கட்டிப்பறக்கும் யோகிபாபு தர்மபிரபு, கூர்கா, ஜாம்பி ஆகிய படங்களைத் தொடர்ந்து தற்போது "பட்லர் பாலு" எனும் படத்தில் காமெடியனாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரோடு இமான் அண்ணாச்சி, மயில்சாமி, ரோபோசங்கர், தாடிபாலாஜி ஆகியோரும் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை அடித்தளமாக கொண்ட இப்படத்தில் யோகிபாபுவிற்கு கல்யாண வீடுகளில் சமையல் செய்யும் சமையல் காரர் வேடம். எப்படி நடிகர் நாகேஷுக்கு சர்வர் சுந்தரம் படம் மிக முக்கியமான படமாக அமைந்ததோ அதுபோல் யோகிபாபுவிற்கு இந்த ‘பட்லர் பாலு’ படம் அமையும் என்கிறார்கள். 



இதுவரை ஏற்காத ஒரு வேடத்தில் யோகிபாபு தோன்ற சமையல் வேலைக்காக சென்ற திருமண மண்டபத்தில் மணப்பெண்ணை யோகிபாபுவின் நண்பர்கள் கடத்தி விடுகிறார்கள். அதனால் போலீஸ் அவரை கைது செய்துவிடுகிறது. போலீசிடம் இருந்து எப்படி வெளியே வந்தார் என்பதை ஒரு இரவுக்குள் நடக்கும் காமெடி கலந்த திரைக்கதையாக இப்படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர்  சுதிர்.M.L

முகேஷ் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை நவம்பர் 8ம் தேதி உலகமெங்கும் அதிகமான திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியிடுகிறது.

Similar News