ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிகர் அஜ்மல் கதாநாயகனாக நடித்து வருகிறார்.
ஜெகன்மோகன் ரெட்டி வாழ்க்கை படத்தில் அஜ்மல்
பதிவு: அக்டோபர் 30, 2019 07:56
அஜ்மல் - ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திரா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அபார வெற்றி பெற்று அதன் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி முதல்வராக பொறுப் பேற்றார்.
கட்சி ஆரம்பித்து குறுகிய காலத்திலேயே ஆட்சியை பிடித்து சாதனை படைத்தார். இந்த நிலையில் ஜெகன் மோகன் ரெட்டி வாழ்க்கை சினிமா படமாக எடுக்கப்படுகிறது. இப்படத்தை பிரபல டைரக்டர் ராம்கோபால்வர்மா இயக்கி வருகிறார்.
இப்படத்துக்கு ‘கம்மா ராஜ்யம் லோ கடப்பா ரெட்லு’ என்று பெயரிட்டுள்ளனர். இதில் ஜெகன்மோகன் ரெட்டி, வேடத்தில் நடிகர் அஜ்மல் நடித்து வருகிறார். இவர் தமிழில் அஞ்சாதே, கோ போன்ற படங்களில் நடித்து உள்ளார்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வருகிறது. இப்படம் குறித்து அஜ்மல் கூறும் போது, இப்படம் அரசியல் திரில்லர் மற்றும் மாநிலத்துக்கு தொடர்புடையதாக இருக்கும்.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு படப்பிடிப்பு தொடங்கியது. நான், ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்தது இல்லை. ஆனால் அவரது வீடியோக்களை பார்த்து அவரை போல் என்னை மாற்றி கொண்டு நடித்து வருகிறேன்.
தற்போதுவரை அவரது வேடத்தில் நடித்ததற்கு நல்ல கருத்துக்கள் வந்துள்ளன. ஜெகன்மோகன் ரெட்டி வேடத்துக்கு பலரது பெயர்கள் பரிசீலிக்கப் பட்டன. இறுதியில் அவரது உயரம் மற்றும் உருவ ஒற்றுமைக்கு நான் சரியாக இருப்பேன் என்று கருதினர். நான் ஏற்கனவே கோ படத்தில் முதல் அமைச்சராக நடித்து இருக்கிறேன்' என்றார்.
Related Tags :