சினிமா
கைதி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கைதி’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார்.
The date is locked!
— DreamWarriorPictures (@DreamWarriorpic) October 17, 2019
He’s getting released!
Yes...#Kaithi releasing this October 25th. #KaithiReleasing25thOct#KaithiDiwalipic.twitter.com/0LG2aXdLoH
ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இந்நிலையில், இப்படத்தை அக்டோபர் 25ம் தேதி வெளியாகும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.