சினிமா
ஆர்.கே.சுரேஷ்

ஆர்.கே.சுரேஷ் இரு வேடங்களில் நடிக்கும் கைலாசகிரி

Published On 2019-10-15 15:44 GMT   |   Update On 2019-10-15 15:44 GMT
தாரை தப்பட்டை படம் மூலம் நடிகராக அறிமுகமான ஆர்.கே.சுரேஷ், தற்போது இரு வேடங்களில் கைலாசகிரி என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஸ்ரீமதி ராவூரி அல்லி கேஸ்வரி வழங்கும் ஸ்ரீ அப்போலோ புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய படத்தின் பெயர் ‘கைலாசகிரி’. ஆர்.கே.சுரேஷ் முதன் முறையாக இரு வேடங்களில் நடித்துள்ள இதில் மதுபாலா, சாகர், முரளி கிருஷ்னா, கண்டா சீனிவாசராவ், பூமாரெட்டி, மேகனா ஸ்ரீ லட்சுமி, பேபி ஹர்ஷீதா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் வசனம் பாடல்களை சாய்மோகன் குமார் எழுத, கன்ஷியாம் இசையமைக்க, முகமது ரபி ஒளிப்பதிவையும், ஜெகதீஷ் பாபு படத்தொகுப்பையும் கவனித்துள்ளனர். 



தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழிகளில் இப்படத்தை ராவூரி வெங்கடசாமி மிகுந்த பொருட் செலவில் தயாரித்துள்ளார்.

தெலுங்கில் 18 வெற்றிப் படங்களை இயக்கி உள்ள தோட்ட கிருஷ்ணா ‘கைலாசகிரி’ படத்தின் கதை திரைக்கதை எழுதி
 இயக்கி உள்ளார். படம் பற்றி இவர் கூறும்போது, ‘கோவிலில் ஆயிரம் வருடம் பழமையானதும் அதீத சக்தி கொண்டதுமான மரகதலிங்கத்தை திருடி விற்க ஒரு திருட்டுக் கும்பல் ஈடுபடுகின்றது. அதை தடுத்து லிங்கத்தை காப்பாற்ற ஆர்.கே.சுரேஷ் முயல்கிறார். எப்படி முறியடிக்கிறார். சிவனின் சக்தி எவ்வாறு வெளிப்படுகின்றது என்பதை கிராபிக் காட்சிகள் மூலம் சிறப்பாக படமாக்கி இருக்கிறோம்’ என்றார்.
Tags:    

Similar News