சினிமா
தயாரிப்பாளர் அர்ச்சனா

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த அர்ச்சனா கல்பாத்தி

Published On 2019-10-15 17:17 IST   |   Update On 2019-10-15 17:17:00 IST
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பிகில்’ படம் பற்றி பரவிய வதந்திக்கு தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் படம் 'பிகில்'. தீபாவளிக்கு வெளியாகும் இந்த படத்தின் டிரெய்லர் அக்டோபர் 12ந்தேதி மாலை 6 மணிக்கு இணையத்தில் வெளியிடப்பட்டது. இந்த டிரெய்லருக்கு இணையத்தில் பெரும் வரவேற்பு கிடைத்து சாதனை படைத்து வருகிறது. 

'பிகில்' டிரெய்லர் வெளியாகி 2 நாட்களே ஆவதால், இன்னும் சில நாட்களில் மேலும் பல சாதனைகளை முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது 'பிகில்' படத்தை தணிக்கை செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 



இந்த நிலையில் பிகில் டிரெய்லரில் வரும் ஒரு காட்சி சக்தே இந்தியா படத்தை போலவே இருக்கிறது என வீடியோ பரவியது. அதனால் சக்தே படத்தின் ரீமேக் உரிமையை வாங்கி தான் பிகில் படம் எடுக்கின்றனர் எனவும் செய்திகள் பரவியது. 

இந்த நிலையில் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அளித்துள்ள பேட்டியில் “சக் தே படத்தின் ரீமேக் உரிமையை நாங்கள் வாங்கவில்லை. அப்படி வந்த செய்தி வதந்தி” என்று கூறியுள்ளார்.

Similar News