சினிமா
விஜு கோட்டே

பழம்பெரும் நடிகர் விஜு கோட்டே காலமானார்

Published On 2019-10-01 07:30 IST   |   Update On 2019-10-01 07:30:00 IST
அமிதாப்பச்சன், தர்மேந்திரா நடித்த ஷோலே திரைப்படத்தில் காளியா கதாபாத்திரத்தில் நடித்த பழம்பெரும் நடிகரான விஜு கோட்டே மும்பையில் காலமானார்.
பழம்பெரும் நடிகரான  விஜு கோட்டே (வயது 77) 1964 ஆம் ஆண்டில் தனது திரைப் பயணத்தை தொடங்கினார். 300க்கும் மேற்பட்ட இந்தி மற்றும் மராத்தி திரைப்படங்களில் நடித்துள்ள அவர், ஷோலே திரைப்படத்தில் காளியா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலம் அடைந்தார்.

அண்டாஸ் அப்னா , கயாமத் சே கயாமத் டக் , வெண்டிலேட்டர், கித்னே ஆத் மே, டு சர்கார்  ஆகியவை விஜு கோட்டே நடித்த திரைப்படங்களில் நல்ல வரவேற்பை பெற்றவை ஆகும். அண்மைக் காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த விஜு கோட்டேவுக்கு பல்வேறு உறுப்புகள் செயல் இழந்து விட்டதாகக் கூறப்படுகிறது.



இந்த நிலையில் நேற்று அதிகாலை மும்பையில் உள்ள அவரது வீட்டில், உறக்கத்திலேயே விஜு கோட்டேவின் உயிர் பிரிந்தது. மருத்துவமனையில் உயிரிழப்பதை விஜு கோட்டே விரும்பாத காரணத்தால் தான் வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Similar News