என்னை அறிந்தால், விஸ்வாசம் படத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்க அனிகா ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
3வது முறையாக அஜித்துக்கு மகளாக நடிக்கும் அனிகா
பதிவு: செப்டம்பர் 14, 2019 18:46
அஜித் - அனிகா
கவுதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தவர் அனிகா. இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. உனக்கென்ன வேணும் சொல்லு என்ற பாடல் பெரும்பாலான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது.
இந்த படத்தை அடுத்து அப்பா - மகள் பாசத்தை மையப்படுத்தி உருவான விஸ்வாசம் படத்திலும் அனிகா அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 60-வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அஜித்தே தனது 60ஆவது படத்தில் அனிகாதான் மகளாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு ஒரு முக்கியமான காரணம் கூட இருக்கிறது என்று கூறப்படுகிறது. அதாவது, அனிகாவை தனது குடும்பமாகவே கருதும் தல அஜித்தின் மகள் அனோஷ்காவிற்கு நெருங்கிய நண்பரும் கூட. இதன் காரணமாக, அவ்வப்போது அஜித்தின் வீட்டிற்கு அனிகா சென்று வருவாராம். அனோஷ்கா மட்டுமல்ல, அனிகாவும் ஷாலினிக்கு செல்லப்பிள்ளையாம். இதன் காரணமாக, அஜித் தனது படங்களின் வெற்றிக்கு அனிகாவை ஒரு சென்டிமென்ட்டாக கருதுகிறாராம்.
Related Tags :