சினிமா
கமல்

இந்தியன்-2 படக்குழுவினருக்கு கமல் அறிவுரை

Published On 2019-09-14 07:29 GMT   |   Update On 2019-09-14 07:29 GMT
ஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படக்குழுவினருக்கு நடிகர் கமல்ஹாசன் அறிவுரை கூறியுள்ளார்.
இந்தியன் படம் திரைக்கு வந்து 23 வருடங்களுக்கு பிறகு அதன் இரண்டாம் பாகம் இந்தியன்-2 என்ற பெயரில் கமல்ஹாசன்-ஷங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது. இதில் காஜல் அகர்வால் கதாநாயகியாக நடிக்கிறார். சித்தார்த், ரகுல் பிரீத்சிங், பிரியா பவானிசங்கர், விவேக், சமுத்திரக்கனி, வித்யுத் ஜமால் ஆகியோரும் நடிக்கின்றனர்.

ரூ.200 கோடி செலவில் இப்படம் தயாராகிறது. இதன் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னை பூந்தமல்லி அருகே நடந்தது. சித்தார்த், ரகுல் பிரீத்சிங் நடித்த காட்சிகள் அங்கு படமாக்கப்பட்டன. பின்னர் தியாகராய நகரில் உள்ள ஒரு ஓட்டலுக்கு வயதான சேனாதிபதி தோற்றத்தில் கமல்ஹாசன் வருவதுபோன்ற காட்சியை படமாக்கினர்.



அதன்பிறகு, வளசரவாக்கத்தில் வில்லன்களை வயதான கம்லஹாசன் வர்ம கலையால் தாக்கி சண்டை போடும் காட்சியையும் படம் பிடித்தனர். அடுத்த கட்டமாக ஆந்திராவில் உள்ள ராஜமுந்திரியில் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டுள்ளனர். இந்தியன்-2 படத்தில் வயதானவராகவும் இளமை தோற்றத்திலும் 2 வேடங்களில் கமல்ஹாசன் நடிக்கிறார்.

முதல் பாகத்தில் இளம் வயது கமல் லஞ்சம் வாங்கும் அரசு அதிகாரியாக வந்தார். 2-ம் பாகத்தில் இளம் வயது கமல்ஹாசன் கதாபாத்திரத்தையும் நல்லவராக சித்தரித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்தியன்-2 படப்பிடிப்பை தாமதம் இல்லாமல் வேகமாக நடத்தி முடிக்குமாறு படக்குழுவினரை கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் பட வேலைகள் வேகமெடுத்துள்ளன.
Tags:    

Similar News