வெங்கட் பிரபு இயக்கத்தில் வைபவ், காஜல் அகர்வால் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் வைபவ், காஜல் அகர்வால்
பதிவு: செப்டம்பர் 11, 2019 13:29
காஜல் அகர்வால், வெங்கட் பிரபு, வைபவ்
தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் காஜல் அகர்வால். சமீபத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக இவர் நடித்த ‘கோமாளி’ படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இவர் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கும் இணைய தொடரில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த இணைய தொடரில் வைபவ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அண்மையில் இவர் நடிப்பில் வெளியான சிக்சர் படம் திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வெங்கட் பிரபு இயக்கியுள்ள பார்ட்டி படம் ஷூட்டிங் முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதையடுத்து அவர் இயக்க இருந்த மாநாடு படத்திலிருந்து சிம்பு விலகியதால் அப்படம் கிடப்பில் உள்ளது. இதனால் தற்போது இணைய தொடரை இயக்க வெங்கட் பிரபு தயாராகியுள்ளார்.
Related Tags :