சினிமா
கடம்பூர் ராஜு

ஆன்லைனில் டிக்கெட் விற்பனை திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும் - கடம்பூர் ராஜு

Published On 2019-09-09 02:58 GMT   |   Update On 2019-09-09 02:58 GMT
ஆன்லைனில் டிக்கெட் விற்பனை திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
சினிமா டிக்கெட் கட்டணங்களை முறைப்படுத்தி அரசு ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டது. மல்டி பிளக்ஸ் மற்றும் குளிர்சாதன திரையரங்குகளுக்கும் குளிர்சாதன வசதி இல்லாத திரையரங்குகளுக்கும் தனிதனி கட்டணங்கள் விதிக்கப்பட்டு உள்ளன. இதுபோல் ஆன்லைன் மூலம் டிக்கெட் கட்டணங்களை வெளிப்படையாக்க வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கம் வலியுறுத்தி வந்தது.

இதனிடையே தமிழகம் முழுவதும் தியேட்டர்களில் ஒரு நாளில் எத்தனை காட்சிகளில் எத்தனை டிக்கெட்டுகள் விற்கப்பட்டு உள்ளன என்பதை கண்காணிக்கும் வகையில் ஆன்லைன் மூலம் மட்டுமே டிக்கெட் விற்பனை செய்ய பரிசீலிக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார்.  அமைச்சரின் இந்த அறிவிப்புக்கு பலர் ஆதரவு தெரிவித்தாலும், எதிர்ப்பு குரலும் தொடர்ந்து எழுந்த வண்ணம் உள்ளன.



இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு, “ ஆன்-லைன் டிக்கெட் விற்பனை திரைத்துறைக்கு ஆரோக்கியம் தரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவிற்கே முன்னுதாரணமாக தமிழ் சினிமா வரலாற்றில் இந்த திட்டம் ஒரு மைல்கல் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Tags:    

Similar News