தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் வழியை பிரபல நடிகையான நிவேதா பெத்துராஜ் பின்பற்றி வருகிறார்.
நயன்தாரா வழியை பின்பற்றும் நிவேதா பெத்துராஜ்
பதிவு: செப்டம்பர் 07, 2019 13:08
நிவேதா பெத்துராஜ் - நயன்தாரா
ஒருநாள் கூத்து படம் மூலம் அறிமுகமான நிவேதா பெத்துராஜ் தொடர்ந்து டிக் டிக் டிக், திமிரு புடிச்சவன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். அடுத்து அவர் விஜய் சேதுபதியுடன் நடித்துள்ள சங்கத்தமிழன் படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
அதன் பிறகு ஜகஜ்ஜால கில்லாடி, பொன்.மாணிக்கவேல் படங்களும் வெளியாக இருக்கின்றன. மேலும் ஹாலிவுட்டில் அறிமுக இயக்குனர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார்.
இது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதை. நயன்தாரா, அனுஷ்கா, அமலாபால் ஆகியோர் கதாநாயகர்களுக்கு ஜோடியாக ஒரு பக்கம் நடித்தாலும் இன்னொரு பக்கம் தங்களுக்கு முக்கியத்துவம் படங்களிலும் நடிக்கிறார்கள். அந்த வரிசையில் நிவேதாவும் இணைந்துள்ளார்.
Related Tags :