சினிமா
பாடலாசிரியர் யுகபாரதி

இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது கிடைக்காது - பாடலாசிரியர் யுகபாரதி

Published On 2019-08-14 13:54 GMT   |   Update On 2019-08-14 13:54 GMT
இன்னும் 5 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவுக்கு தேசிய விருது கிடைக்காது என்று கன்னிராசி பட விழாவில் பாடலாசிரியர் யுகபாரதி கூறியுள்ளார்.
விமல், வரலட்சுமி நடிப்பில் உருவாகி உள்ள கன்னி ராசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் பாடலாசிரியர் யுகபாரதி பேசியதாவது:-

இந்த படத்தின் தயாரிப்பாளர் ‌ஷமீம் இப்ராகிம் ஒரு பத்திரிகையாளர். பல்வேறு பத்திரிகைகளில் பணிபுரிந்து தற்போது தயாரிப்பாளர் ஆகி இருக்கிறார். இந்த படத்தில 3 பாடல்கள் எழுதி இருக்கிறேன். அதில் ஒரு கொலு பாடலும் அடக்கம். அந்த பாடலில் கொலுவின் இடையில் பெரியார் படத்தை கொண்டு வந்து சாமி சிலைகளுக்கு இடையில் வைத்தார். அவர் தான் சொல்ல வந்த அரசியலை காட்டி விட்டார்.



காஷ்மீர் பற்றி ரஜினி பேசியதற்கு விஜய் சேதுபதி பேசியதற்குமான வித்தியாசம் இதுதான். இந்த படம் தேசிய விருது பெறும் என்று நான் சொல்ல மாட்டேன். காரணம் இன்னும் 5 ஆண்டுகளுக்கு எந்த தேசிய விருதும் தமிழ் சினிமாவுக்கு கிடைக்காது என்பது சமீபத்தில் தெரிந்து விட்டது.

எனவே யாரும் தேசிய விருதுக்காக படம் எடுக்க வேண்டாம். விரக்தியில் நான் கூறிய வார்த்தைகள் இது. தேசிய விருது பட்டியலில் தமிழ் சினிமாவுக்கு இன்னும் அதிக பிரதிநிதித்துவம் வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.
Tags:    

Similar News