சினிமா
வசந்தபாலன்

தமிழ் படங்கள் புறக்கணிப்பு.... அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் - வசந்தபாலன்

Published On 2019-08-14 11:12 IST   |   Update On 2019-08-14 11:12:00 IST
தேசிய விருதில் தமிழ் படங்கள் புறக்கணிக்கப்பட்டதற்கு அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் என இயக்குனர் வசந்தபாலன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் திரைப்படத்துறைக்கான தேசிய விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. 66-வது தேசிய திரைப்பட விருதுக்கான பட்டியல் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. தமிழில் ’பாரம்’ படத்திற்கு மட்டுமே விருது கிடைத்துள்ளது. மற்ற பிரிவுகளில் தமிழ் படங்கள் இடம் பெறாதது சினிமா ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

பரியேறும் பெருமாள், சர்வம் தாளமயம், இரும்புத்திரை, ராட்சசன், 96, 2.0, சீதக்காதி, கனா, சூப்பர் டீலக்ஸ், வட சென்னை ஆகிய படங்கள் தமிழ் ரசிகர்களை அதிக கவர்ந்த படங்கள். மேலும் பல திரைப்பட விழாக்களில் இப்படங்கள் கலந்துக் கொண்டு விருதுகள் பெற்றுள்ளது.  ஆனால், இந்தப்படங்கள் தேசிய விருது பட்டியலில் இடம் பெறாதது ரசிகர்கள் மட்டுமல்லாது திரைப்படத் துறையினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இந்நிலையில், தேசிய விருது வழங்குவதில் தமிழ் திரைப்படங்களும், தமிழ் கலைஞர்களும் ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட்டு உள்ளதாக இயக்குநர் வசந்தபாலன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்தள்ள அவர், தமிழ் உச்ச நட்சத்திரங்களும், திரை ஆளுமைகளும், தமிழக அரசியல் தலைவர்களும் இந்த அநீதிக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Similar News