சினிமா
அஜித்

4 நாட்களில் 40 கோடி வசூலித்த நேர்கொண்ட பார்வை

Published On 2019-08-13 05:37 GMT   |   Update On 2019-08-13 05:37 GMT
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படம் 4 நாட்களில் 40 கோடி வசூல் செய்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’நேர்கொண்ட பார்வை’. போனி கபூர் தயாரித்து, அவரே நேரடியாக விநியோகஸ்தர்களிடம் கொடுத்து விநியோகம் செய்தார். ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப்படம் முதல் நாளில் பெரும் வரவேற்பை பெற்றது. ஞாயிறு வரை இந்தப்படம் தமிழகத்தில் மொத்த வசூலில் 40 கோடியைத் தாண்டியுள்ளது. 

நேற்றும் விடுமுறை என்பதால் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சென்னையில் இந்தப் படம் முதல் 4 நாட்களில் மட்டும் 5.5 கோடி வசூல் செய்துள்ளது. ஒவ்வொரு நாளுமே 1 கோடியைத் தாண்டியே வசூல் செய்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் போனிகபூர். 



முக்கியமாக மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இந்தப் படத்துக்கு நல்ல கூட்டம் இருக்கிறது. சிசென்டர்கள் எனப்படும் பகுதிகளில் மட்டும் மிகக் குறைந்தளவிலேயே வசூல் செய்து வருகிறது. முக்கிய நகரங்கள் அனைத்திலுமே நல்ல வசூலைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

மேலும், வெளிநாட்டு வசூல் 1 மில்லியன் டாலரைத் தாண்டிவிட்டதாக தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் 250கே டாலர்கள் வசூலித்துள்ளது. அஜித்தின் முந்தைய படமான ‘விஸ்வாசம்‘ படத்தை விட இது அதிகம். 



ஏனென்றால் அந்தப் படம் ‘பேட்ட’ உள்ளிட்ட சில படங்களுடன் வெளியானது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் செய்து வருவதாகவும், விரைவில் இதற்காக முதலீடு செய்யப்பட்ட பணம் திரும்பிவிடும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.
Tags:    

Similar News