சினிமா
தனுஷ், அருணாச்சலம் முருகானந்தம்

பேட்மேன் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க வேண்டும் - அருணாச்சலம் முருகானந்தம்

Published On 2019-08-11 11:23 GMT   |   Update On 2019-08-11 11:23 GMT
தேசிய விருதை வென்ற பேட்மேன் படம் தமிழில் ரீமேக் செய்யப்பட்டால் அதில் தனுஷ் நடிக்க வேண்டும் அருணாச்சலம் முருகானந்தம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பெண்களுக்காக குறைந்த விலையில் ‘நாப்கின்’ தயாரித்து பத்மஸ்ரீ விருது பெற்றவர் அருணாசலம் முருகானந்தம். கோவை மாவட்டத்தை சேர்ந்த இவருடைய வாழ்க்கையை மையமாக வைத்து ‘பேட்மேன்’ என்ற பெயரில் உருவானது. 

இதில் அருணாசலம் முருகானந்தம் வேடத்தில் அக்‌ஷய் குமார் நடித்திருந்தார். பால்கி இப்படத்தை இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. சிறந்த சமூக படத்திற்கான தேசிய விருதை இப்படம் வென்றது. 



இந்நிலையில், பேட்மேன் திரைப்படம் தேசிய விருது வென்றது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அருணாச்சலம் முருகானந்தம் தெரிவித்தார். இது குறித்து பேட்டி அளித்த அவர், பேட்மேன் படம் தமிழ் மொழியில் எடுக்கப்படும்போது அதில் நடிகர் தனுஷ் நடிக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். 

Tags:    

Similar News