சினிமா
யோகிபாபு

ஆக்‌ஷன் ஹீரோவாக மாறும் யோகிபாபு

Published On 2019-08-09 20:40 IST   |   Update On 2019-08-09 20:40:00 IST
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருக்கும் யோகிபாபு, அடுத்தகட்டமாக ஆக்‌ஷன் ஹீரோவாக களமிறங்க இருக்கிறார்.
தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி காமெடியனாக இருப்பவர் யோகிபாபு. இவர் இல்லாத படங்களே இல்லை என்ற நிலை தான் நீடித்து வருகிறது. அந்த வகையில் யோகிபாபுவை மையமாக வைத்து தற்போது “காதல் மோதல் 50/50” எனும் ஆக்‌ஷன் கலந்த பேய் படம் உருவாகி வருகிறது.

தரண்குமார் இசையமைக்கும் இப்படத்திற்கு பிரதாப் ஒளிப்பதிவு செய்துள்ளார். அலெக்சாண்டர் கதை எழுத பிரபல கன்னட திரைப்படம்  "த்ரயா" என்ற படத்தின் இயக்குனர் கிருஷ்ணா சாய் திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார். இப்படத்தில் பிரத்யேக பிரம்மாண்டமான சண்டைக்காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பில்லா ஜெகன் யோகிபாபுவிற்காக அமைக்க உள்ளார். 



லிபிசினி கிராப்ட்ஸ் நிறுவனம் மூலம் வி.என்.ஆர் இப்படத்தினை தயாரித்து வருகிறார். இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இப்படத்தின் டீசர் விரைவில் வெளியாக இருக்கிறது.

Similar News