நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகை வைல்ட் கார்டு மூலம் வீட்டுக்குள் சென்றுள்ளார்.
வைல்ட் கார்டு என்ட்ரி- பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிரபல நடிகை
பதிவு: ஆகஸ்ட் 08, 2019 09:19
கமல்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பிரபல நடிகை வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டிற்கு செல்ல இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் மிகவும் பிரபலமானது பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட பல பிரபலங்கள் இன்று முன்னணி நடிகர், நடிகைகளாக வலம் வருகின்றனர்.
தற்போது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி நடந்து வருகிறது. 100 நாட்கள் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் 16 பேர் போட்டியாளர்களாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றனர். அதில் பாத்திமா பாபு, நடிகை வனிதா விஜயகுமார், மோகன் வைத்யா, மீரா மிதுன், ரேஷ்மா ஆகிய 5 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர். இந்த வார தொடக்கத்தில் நடிகர் சரவணன் சில காரணங்களால் அதிரடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில், பிரபல நடிகையான கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளார். சரவணன் திடீரென வெளியேற்றப்பட்ட நிலையில், தற்போது கஸ்தூரி வைல்ட் கார்டு மூலம் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :