இயக்குனர் விஷ்ணுவர்தன் தயாரிக்கும் வெப் சீரிசில் பிரபல நடிகைகளான அக்ஷரா, காயத்ரி சுனைனா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.
விஷ்ணுவர்தனுக்காக இணைந்த மூன்று கதாநாயகிகள்
பதிவு: ஆகஸ்ட் 07, 2019 15:46
இயக்குனர் விஷ்ணு வர்தன்
தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகள் திரைப்படங்களைப் போலவே இணைய தொடர் பக்கமும் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். ஹாலிவுட், பாலிவுட் போன்று தமிழில் வெப் சீரிஸ் அதிகம் உருவாகிவிடவில்லை. இருப்பினும் தமிழ் ரசிகர்கள் முன்னணி ஆன்லைன் ஒளிபரப்பு தளங்கள் மூலம் வேற்றுமொழி வெப் சீரிஸ்களைத் தொடர்ந்து பார்த்து வருகின்றனர்.
தற்போது வெப் சீரிஸை நோக்கி பிரபல நாயகிகள் வரத்தொடங்கியுள்ளனர். காஜல் அகர்வால், வைபவ் இணைந்து நடிக்கும் வெப் சீரிசை வெங்கட் பிரபு இயக்குகிறார். குரு சோமசுந்தரம் நடிக்கும் டாப்லெஸ் வெப் சீரிசை அறிமுக இயக்குநர் தினேஷ் மோகன் இயக்க சினிஷ் தயாரிக்கிறார்.
இயக்குநர் விஷ்ணுவர்தன் தயாரிக்கும் வெப் சீரிஸ் பிங்கர்டிப். அறிமுக இயக்குநர் ஷிவகர் இயக்க, காயத்ரி, சுனைனா, அக்ஷரா ஹாசன், அஸ்வின் கக்குமானு, மதுசுதன் ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். த்ரில்லர் பாணியில் உருவாகும் இந்த வெப் சீரிஸ் ஜீ5 தளத்தில் ஆகஸ்ட் 21-ம் தேதி முதல் ஒளிபரப்பாகவுள்ளது.