சினிமா
அனுபம் கேர், அமலா பால், சித்தார்த், அனுராக் கஷ்யப்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து நீக்கம்- திரை பிரபலங்கள் கருத்து

Published On 2019-08-07 09:15 GMT   |   Update On 2019-08-07 09:15 GMT
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்பட்டது தொடர்பாக திரை பிரபலங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டு வந்த 370 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதாக மத்திய மந்திரி அமித்ஷா மாநிலங்களவையில் அறிவித்தார். இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பும் ஆதரவும் கலந்த குரல்கள் ஒலிக்கின்றன. சினிமா சார்ந்த பிரபலங்களும் தங்கள் ஆதரவையும் எதிர்ப்பையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அமலா பால் தனது டுவிட்டர் பதிவில், “எனது கருத்துப்படி, இது ஒரு ஆரோக்கியமான, நம்பிக்கையான, மிகவும் தேவையான மாற்றம். இது ஒரு எளிதான பணி அல்ல. நமது மதிப்புமிக்க நரேந்திர மோடி போன்ற ஒரு தைரியமான தலைவரால் தான் இவ்வாறான முடிவுகளை செயல்படுத்த முடியும். எதிர்காலத்தின் அமைதியான நாட்களுக்காக பிரார்த்திக்கிறேன்” என மோடிக்கு ஆதரவு தெரித்து தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.



நடிகர் சித்தார்த் கூறுகையில், ‘‘இந்த நாடானது அழிவை நோக்கிப் பயணிக்கும் ஒருவரின் தலைமையை கொண்டுள்ளது. இதெல்லாம் திசைதிருப்பும் வேலை. இதையெல்லாம் தெரிந்துகொண்டேதான் செய்கிறார்கள்" என்றார்.

கங்கனா ரணாவத் கூறுகையில், 370-வது பிரிவை அகற்றுவது குறித்து நீண்ட காலமாக போராட் டம் இருந்து வந்துள்ளது. பயங்கரவாதம் இல்லாத ஒரு தேசமாக, நாம் செல்லப்போகும் திசைக்கு இது ஒரு வரலாற்று ரீதியான நடவடிக்கையே. நான் இதை மிக நீண்ட காலமாகவே வலியுறுத்தி வருகிறேன். இந்த சாத்தியமற்ற சாதனையை மோடியால் மட்டுமே சாதிக்க முடியும் என்றெனக்குத் தெரியும் என்றார்.



நடிகர் அனுபம் கேர் கூறுகையில், காஷ்மீருக்கான தீர்வு ஆரம்பமாகியுள்ளது என்றார்.

நடிகர் சஞ்சய் சூரி கூறுகையில், “ஜம்மு காஷ்மீரில் அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்” என்றார்.

இந்திப்பட இயக்குனர் அனுராக் கஷ்யப் கூறுகையில், ‘ஒரு மனிதன் 120 கோடி மக்களின் நலனுக்காக செய்ய வேண்டிய சரியான வி‌ஷயம் என்னவென்று, தனக்குத் தெரியும் என்று நினைக்கிறான். இருப்பதிலேயே இது தான் அச்ச மூட்டுவதாக இருக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News