சினிமா
ஜி.வி.பிரகாஷ் குமார்

ஜி.வி.பிரகாஷின் 2 படங்கள் ஒரே நாளில் ரிலீஸ்

Published On 2019-08-07 11:31 IST   |   Update On 2019-08-07 11:31:00 IST
நடிகரும், இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ்குமார் நடித்துள்ள 2 படங்கள் ஒரே நாளில் ரிலீசாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் வெற்றிபெற்ற '100 சதவீத லவ்' திரைப்படத்தில் நாக சைதன்யா, தமன்னா நடித்திருந்தனர். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாகியுள்ள '100 சதவீத காதல்' திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷும் ஷாலினி பாண்டேவும் நடித்துள்ளனர். இந்தப் படம் தற்போது திரைக்கு வர தயாராகி வருகிறது. 

கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவருக்கும், மாணவிக்கும் இடையே நடக்கும் போட்டியை காதலும், நகைச்சுவையும் கலந்து படமாக உருவாக்கி இருக்கிறார்கள். எம்.எம்.சந்திரமௌலி இயக்கியுள்ள இந்தப்படம் செப்டம்பர் 6ம் தேதி வெளியாகவுள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 



இதேபோல் சசி இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் - சித்தார்த் நடித்துள்ள ’சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படமும் அதே தேதியைக்
குறிவைத்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி வருகின்றன. அக்காள்-தம்பி பாசத்தை ஒரு புதிய கோணத்தில் சொல்லும் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் போக்குவரத்து போலீஸ் இன்ஸ்பெக்டராக சித்தார்த்தும், பைக் ரேசராக ஜி.வி.பிரகாஷும் நடித்துள்ளனர். 

Similar News