சினிமா
காஜல் அகர்வால்

காஜல் அகர்வால் படத்துக்கு சென்சாரில் 25 கட்

Published On 2019-08-07 02:52 GMT   |   Update On 2019-08-07 02:52 GMT
காஜல் அகர்வால் படத்துக்கு சென்சாரில் 25 இடங்களில் வெட்டியுள்ளதால் படக்குழுவினர் மறு சீராய்வுக் குழுவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர்.
கங்கணா ரணாவத் நடிப்பில் இந்தியில் வெளியான ‘குயின்’ படம் தென்னிந்திய மொழிகளில் ஒரே நேரத்தில் ரீமேக் ஆகிறது. காஜல் அகர்வாலை நாயகியாகக் கொண்டு தமிழில் ‘பாரிஸ் பாரிஸ்’ எனவும், தமன்னாவை நாயகியாகக்கொண்டு தெலுங்கில் ‘தட் இஸ் மகாலெட்சுமி’ எனவும் மஞ்சிமா மோகனை நாயகியாகக் கொண்டு மலையாளத்தில் ‘ஜம் ஜம்’ எனவும் பருல் யாதவ்வை கதா நாயகியாகக்கொண்டு கன்னடத்தில் ‘பட்டர்பிளை’ எனவும் உருவாகியுள்ளது. 

நான்கு மொழிகளிலும் மனுகுமரன் தயாரித்துள்ளார். தமிழ் மற்றும் கன்னட பதிப்பை நடிகரும் இயக்குனருமான ரமேஷ் அரவிந்த் இயக்கி உள்ளார். ‘பாரிஸ் பாரிஸ்’ படத்தை நிறைவு செய்து சென்சாருக்கு அனுப்பிய படக்குழுவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சென்சார் துறை பல இடங்களில் காட்சிகளின் சில பகுதிகளை மங்க செய்துள்ளனர். 



சில காட்சிகளில் ஆடியோவை மட்டும் வெட்ட, சில காட்சி ஆடியோ, வீடியோ இரண்டையும் வெட்டி உள்ளனர். மொத்தமாக 25 இடங்களில் வெட்டியுள்ளதால் படக்குழுவினர் மறு சீராய்வுக் குழுவுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளனர். இந்த படத்தின் மலையாள, கன்னட பதிப்புகளுக்கு தணிக்கைத் துறை யு/ஏ சான்றிதழ் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News