சினிமா
ஜெயம்ரவி

ரஜினியை கேலி செய்யும் காட்சி- கோமாளி படத்திற்கு ரசிகர்கள் கடும் எதிர்ப்பு

Published On 2019-08-04 09:59 GMT   |   Update On 2019-08-04 09:59 GMT
‘கோமாளி’ டிரைலரில் ரஜினிகாந்த்தின் அரசியல் வரவு குறித்து கேலி செய்யும் வகையில் இடம்பெற்ற காட்சிக்கு, அவரின் ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடித்துள்ள ‘கோமாளி’ படத்தின் டிரைலர் நேற்று மாலை வெளியானது. காட்சி வெளியான சில மணி நேரங்களிலேயே யுடியூப்பில் பல லட்சம் முறை பார்க்கப்பட்டுள்ளது. அந்த டிரைலரில் நடிகர் ரஜினிகாந்த் 1996-ல் இருந்தே அரசியலுக்கு வருவதாக கூறி வருகிறார் என்பதை கேலி செய்து ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது.

ஜெயம் ரவி கோமாவில் 19 ஆண்டுகளாக இருந்து மீண்டு வருவதாக கதை உருவாக்கப்பட்டுள்ளது. கோமாவில் இருந்து மீண்டு எழும் ஜெயம் ரவியிடம் அவர் கோமாவில் இருந்ததை நிரூபிக்க யோகி பாபு டிவியை ஆன் செய்கிறார். அதில் ரஜினி அரசியலுக்கு வருவதாக சொல்கிறார்.



ரஜினியை கிண்டல் செய்யும் விதமாக இந்த காட்சி படத்தில் இடம்பெற்றதா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு படத்தின் தயாரிப்பாளரும், நாயகன் ஜெயம் ரவியும் மறுப்பு தெரிவித்தனர். ஆனால் ரஜினி ரசிகர்கள் இந்த காட்சிக்கு எதிர்ப்பு தெரித்து ஜெயம் ரவியையும் படத்தையும் விமர்சித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News