சினிமா
அமலா பால்

நிர்வாண காட்சியால் சிக்கல்- ஆடை படத்துக்கு தடை கோரி மனு

Published On 2019-07-18 07:59 GMT   |   Update On 2019-07-18 08:00 GMT
அமலா பால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘ஆடை’ படத்துக்கு தடை கோரி டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
அமலா பால் நடிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ஆடை. வரும் வெள்ளிக்கிழமை ரிலீசாக இருக்கும் இந்த படம் சர்ச்சைகளை சந்தித்து வருகிறது. மேயாதமான் படத்தை தொடர்ந்து ரத்னகுமார் இயக்கும் இப்படம் திரில்லர் ஜானரில் உருவாகியுள்ளது. காமினி என்னும் கதாபாத்திரத்தில் அமலாபால் நடித்திருக்கிறார்.

படத்தின் போஸ்டரில் அமலா பால் நிர்வாணமாக தோன்றும் காட்சி வெளியானது. டீசரிலும் அமலா பாலின் நிர்வாண காட்சிகள் இடம்பெற்று இருந்தன. இதனால் படத்தின் டீசர், போஸ்டர்கள் வெளியானதில் இருந்தே சர்ச்சைகள் எழுந்துவந்தன. இதனால் விஜய் சேதுபதியுடன் நடித்துக் கொண்டிருந்த படத்திலிருந்து அமலா பால் நீக்கப்பட்டார். 



ஆணாதிக்க மனநிலையில் தயாரிப்பு நிறுவனங்கள் நடந்துகொள்வது தமிழ்த் திரையுலகிற்கு நல்லதல்ல என்ற அமலாபாலின் அறிக்கையும் பரபரப்பை ஏற்படுத்தியது. சர்ச்சைக்குரிய நிர்வாண காட்சிகளை கொண்டுள்ள போஸ்டர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த போஸ்டர்களை விளம்பரங்களில் பயன்படுத்தக் கூடாது எனவும் இத்தகைய படங்களை தடை செய்ய வேண்டும் என்றும் அனைத்து அரசியல் மக்கள் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா என்பவர் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

நிர்வாண காட்சியை பயன்படுத்தி திரைப்படத்தை விளம்பரபடுத்துவது சமுதாயத்தை சீரழிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஏற்கனவே பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், தமிழ் திரைப்பட கதாநாயகிகளில் ஒருவராக பார்க்கப்படும் அமலாபால் இது போன்ற காட்சிகள் கொண்ட திரைபடத்தில் நடித்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

சுவரொட்டிகளிலும் மற்றும் பிற விளம்பரங்களிலும் ஆபாச காட்சி இடம் பெறுவதற்கு தடை விதிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். அப்படி தடை விதிப்பதற்கு தங்களுக்கு ஏதாவது இடையூறு இருக்குமேயானால் நாங்கள் களத்தில் இறங்கி பெண்கள் பாதுகாப்பிற்காகவும், தமிழ் கலாச்சாரத்தை காப்பதற்காகவும் போராடுவதற்கு தயாராக உள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News