விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகி வரும் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமான அமலாபால், தற்போது அப்படத்தில் இருந்து விலகி இருக்கிறார்.
விஜய் சேதுபதி படத்தில் இருந்து விலகிய அமலாபால்
பதிவு: ஜூன் 25, 2019 13:40
இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனிடம் இணை இயக்குநராக பணிபுரிந்தவர் வெங்கட கிருஷ்ண ரோகநாத். இவர் இயக்கத்தில் உருவாகும் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அமலா பால் ஒப்பந்தமாகி இருந்தார்.
விஜய் சேதுபதியின் 33-வது படமான இப்படத்திற்கு இன்னும் தலைப்பிடப் படவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் பூஜையுடன் பழனியில் தொடங்கி நடந்து வருகிறது.
இந்நிலையில் கால்சீட் பிரச்சினை காரணமாக அமலா பால் படத்தில் இருந்து விலகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவருக்கு பதில் மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடிக்க இருப்பதும் தெரிய வந்துள்ளது.
Related Tags :