சினிமா

போலீஸ் அதிகாரியாக நடிக்கும் ஜெய் ஆகாஷ்

Published On 2019-04-15 14:06 GMT   |   Update On 2019-04-15 14:06 GMT
கௌதம் இயக்கத்தில் உருவாக இருக்கும் ‘தோள் கொடு தோழா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக ஜெய் ஆகாஷ் நடிக்க இருக்கிறார். #JaiAkash #TholKoduThozha
ரோஜா மாளிகை படத்தை தயாரித்த பர்ஸ்ட் லுக் மூவிஸ் பட நிறுவனம் அடுத்ததாக தயாரிக்கும் படத்திற்கு "தோள் கொடு தோழா" என்று நட்பை கெளரவப்படுத்தும் விதமாக வைத்திருக்கிறார்கள். கதாநாயகனாக ஜெய் ஆகாஷ் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கிறார். மூன்று புதுமுகங்களாக ஹரி, ராகுல், பிரேம் நடிக்கிறார்கள்.

கதாநாயகியாக மும்பையை சேர்ந்த அக்‌ஷிதா, பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ நடிக்கிறார்கள். மற்றும் நாசர், ஆடுகளம் நரேன், தேவதர்ஷினி, சிங்கம்புலி, முத்துக்காளை ஆகியோர் நடிக்கிறார்கள்.



கதை, திரைக்கதை, வசனம் எழுதி கெளதம் இயக்குகிறார். இப்படம் குறித்து இயக்குனர் கூறும்போது, ‘படித்தால் நல்ல வேலை கிடைக்கும் என்கிற நினைப்பில் எல்லோரும் படிக்கிறார்கள். எல்லோருக்கும் அரசாங்கத்தால் வேலை கொடுக்க முடியாது. அப்படி வேலை கிடைக்காதவர்கள் தவறான பாதைக்கு மாறி விடுகிறார்கள். அப்படி படித்த நான்கு மாணவர்களின் வாழ்க்கை பதிவு தான் தோள் கொடு தோழா.

தன்னம்பிக்கை சிந்தனையை வளர்க்கும் விதமான கதையம்சம் கொண்ட படமாக உருவாகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்குகிறது. படப்பிடிப்பு சென்னை, பாண்டி, ஊட்டி, கொச்சின் மற்றும் மலேசியாவில் நடைபெற உள்ளது’ என்றார்.
Tags:    

Similar News