சினிமா

அரசியல் கட்சிகளுக்கு இளையராஜா எச்சரிக்கை

Published On 2019-04-11 18:36 IST   |   Update On 2019-04-11 18:36:00 IST
தற்போது பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் கட்சிகளுக்கு இசையமைப்பாளர் இளையராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார். #Ilayaraja
 தேர்தல் களத்தில் சில கட்சிகள், பிரச்சார யுக்திக்காக நடிகர்களின் புகைப்படங்களைப் பயன் படுத்துவது வழக்கம். அவ்வாறு பயன்படுத்தும் போது சம்பந்தப்பட்ட நடிகர்கள், அறிக்கை மூலமாக இதற்கு விளக்கம் அளிப்பார்கள். அதே போல் இந்தத் தேர்தலில் இசையமைப்பாளர் இளையராஜாவின் புகைப்படத்தை சில அரசியல் கட்சிகள் பயன்படுத்தியதாகத் தெரிகிறது. 



இது சர்ச்சையாவதற்குள் அதை தடுப்பதற்காக, இளையராஜா தரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘’சில அரசியல் கட்சிகள் இந்த தேர்தலுக்கான வாக்குகளைப் பெற இளையராஜாவின் புகைப்படத்தை பயன்படுத்து கின்றனர். எந்த‌ அரசியல் க‌ட்சிக‌ளும் அவரது பெயரையோ அல்லது அவ‌ர‌து புகைப்படத்தையோ அர‌சிய‌ல் லாப‌த்திற்காக பயன்படுத்த வேண்டாம்‘’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News