சினிமா

ரஜினியுடன் நடிப்பது குறித்து மனம் திறந்த யோகி பாபு

Published On 2019-03-01 17:33 IST   |   Update On 2019-03-01 17:33:00 IST
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் யோகிபாபு நடிப்பது குறித்து மனம் திறந்து பேட்டியளித்துள்ளார். #Rajini #YogiBabu #ARMurugadoss
முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தில் காமெடி வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு யோகிபாபுவுக்கு கிடைத்துள்ளது. இதுபற்றி யோகிபாபு அளித்துள்ள பேட்டியில், ‘பேட்ட’ படத்திலேயே ரஜினி சார்கூட நடிக்க வேண்டியது. அவர்கூடவே வரும் வேடம் தான். வேற படங்கள் சென்று கொண்டிருந்ததால் வாய்ப்பு கை நழுவி போய்விட்டது. 



வருத்தமாக சுற்றிக்கொண்டு இருந்தேன். இப்போது இந்த வாய்ப்பு, அந்த வருத்தத்தை போக்கி விட்டது. ‘சர்கார்’ படப்பிடிப்பில் ‘அடுத்து ஒரு நல்ல செய்தி இருக்கு. நாம் பண்ணுவோம்’ என்று முருகதாஸ் சார் சொன்னார். அந்த நல்ல செய்தி, ரஜினி சார் படம்னு தெரிந்தபோது அவ்வளவு சந்தோ‌ஷம். படப்பிடிப்பு தேதிகள் திட்டமிட்டு வருகிறார்கள். இந்த முறை வாய்ப்பை இழந்துவிடமாட்டேன்”. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Similar News