சினிமா

மீண்டும் சிக்கலில் எனை நோக்கி பாயும் தோட்டா - இந்த மாத இறுதியில் ரிலீஸ்?

Published On 2019-03-01 09:04 IST   |   Update On 2019-03-01 09:04:00 IST
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் உருவாகி இருக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் ரிலீசுக்கு தயாராகி இருக்கும் நிலையில், படத்திற்கு மற்றுமொரு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. #ENPT #Dhanush
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் முழு படப்பிடிப்பும் முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.

இதைடுத்து படத்தை திரைக்கு கொண்டு வர படக்குழுவினர் தயாரானபோது, மேலும் சில சிக்கல்கள் ஏற்பட்டு படம் மேலும் முடங்கி விடுமோ என்ற நிலைமை ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தயாரிப்பு தரப்பில் முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்களால் இந்த படத்துக்கு பிரச்சினை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.



இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பது குறித்து விநியோகஸ்தர்கள் சங்கம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சுமுக உடன்பாடு ஏற்பட்டு எனை நோக்கி பாயும் தோட்டா இந்த மாத இறுதியில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மார்ச் 28-ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதில், தனுஷ் ஜோடியாக மேகா ஆகாஷும், முக்கிய கதாபாத்திரங்களில் சசிகுமார், ராணா, வேல ராமமூர்த்தி உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். #ENPT #Dhanush #MeghaAkash #Sasikumar GauthamMenon

Similar News