சினிமா

அண்ணனுடன் மீண்டும் இணையும் தனுஷ்

Published On 2018-10-26 14:05 IST   |   Update On 2018-10-26 14:05:00 IST
பல படங்களில் அடுத்தது ஒப்பந்தமாகும் நடிகர் தனுஷ், அடுத்ததாக மீண்டும் அண்ணன் செல்வராகவன் இணைய இருக்கிறார். #Dhanush #SelvaRaghavan
தனுஷ் நடிப்பில் வெளியான ‘வடசென்னை’ திரைப்படம் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து தனுஷ் தனது இயக்கத்தில் தயாராகி வரும் பிரம்மாண்ட சரித்திர படத்தை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் நான்காவது முறையாக இணைகிறார்.

அதற்கு அடுத்து சமீபத்தில் வெளிவந்த ‘ராட்சசன்’ படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் ஒரு ஆக்‌‌ஷன் திரில்லர் படத்திலும் நடிக்கவிருக்கிறார். அந்த படத்துக்கு பிறகு செல்வராகவனும் தனுஷும் அடுத்த ஆண்டு இறுதியில் இணையவிருக்கிறார்கள்.



இப்படம் இவர்கள் இருவரின் கூட்டணியில் ஏற்கெனவே வந்த புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாகவும் இருக்கலாம் என்கிறார்கள். செல்வராகவன் தற்போது சூர்யா, ரகுல்பிரீத்தி சிங், சாய் பல்லவி நடிப்பில் என்.ஜி.கே படத்தை இயக்கி வருகிறார். 
Tags:    

Similar News