சினிமா

இத்தகைய ஆட்களுடன் பணிபுரிய விருப்பமில்லாததால் வெளியேறுகிறேன் - அமீர்கான்

Published On 2018-10-11 15:56 IST   |   Update On 2018-10-11 15:56:00 IST
அமீர்கான் தயாரிக்கவிருந்த ‘மொகுல்’ திரைப்படத்தின் இயக்குநர் மீது பாலியல் புகார் கூறப்பட்டுள்ள நிலையில், இத்தகைய ஆட்களுடன் பணிபுரிய விருப்பமில்லாமல் வெளியேறுவதாக அமீர்கான் தெரிவித்துள்ளார். #AamirKhan #Mogul
இந்திப்பட இயக்குனர் அனுராக் காஷ்யப் உறுப்பினராக இருந்த பேன்டம் பிலிம்ஸின் நிர்வாகி விகாஷ் பாகல் மீதும், ஆமீர்கான் தயாரிக்கவிருந்த ‘மொகுல்’ திரைப்படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூர் மீதும் செக்ஸ் புகார்கள் கூறப்பட்டன.

நடிகர் அலோக்நாத், பாடகர் கைலாஷ்கேர் பெயர்களும் இந்த விவகாரத்தில் அடிப்படுகிறது.

இதனால் அமீர்கான் தயாரிக்கும் படத்தில் இருந்து டைரக்டர் சுபாஷ்கபூர் நீக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி அமீர்கான் மற்றும் அவரின் மனைவி கிரன் ராவ் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-



‘திரைப்படத் துறையை அனைவருக்கும் பாதுகாப்பான ஒரு வேலை இடமாய் மாற்றும் குறிக்கோளாகக் கொண்டுள்ளது எங்கள் நிறுவனம். பாலியல் குற்றங்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள மாட்டோம். அடுத்து நாங்கள் தயாரிக்கவிருந்த படத்தின் இயக்குனர் சுபாஷ் கபூருடன் பணிபுரிய விருப்பமில்லை. அவரது வழக்கு நீதிமன்றத்தில் இருந்தாலும், இத்தகைய ஆள்களுடன் பணிபுரிய வேண்டாம் என முடிவெடுத்து, அந்தப் படத்திலிருந்து வெளியேறுகிறோம். திரைப் படத்துறையைப் பாதுகாப்பான வேலையிடமாக மாற்ற நாங்கள் எந்த ஒரு நல்ல முடிவையும் எடுப்போம்.

இவ்வாறு தெரிவித்துள்ளனர். #AamirKhan #Mogul

Tags:    

Similar News