சினிமா

ஒருத்தரிடம் மட்டும் இவ்வளவு திறமையா? - மேகா ஆகாஷ்

Published On 2018-09-05 14:10 GMT   |   Update On 2018-09-05 14:10 GMT
தனுஷுடன் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தில் நடித்திருக்கும் மேகா ஆகாஷ், ஒருத்தரிடம் மட்டும் இவ்வளவு திறமையா.. என ட்விட் செய்திருக்கிறார். #MeghaAkash
தெலுங்கு படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் மேகா ஆகாஷ். இவர் தமிழில் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படம் மூலம் அறிமுகமாக இருக்கிறார். இதன் படப்பிடிப்பு முடிவதற்கு முன்பே பாடல்கள் வெளியானதால், தமிழ் ரசிகர்களிடையே மேகா ஆகாஷ் மிகவும் பிரபலமானார்.

தற்போது ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளது. தனுஷுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட மேகா ஆகாஷ், என்னுடைய திறமையான சக நடிகர். இவரிடம் இருந்து நிறைய கற்றுக் கொண்டேன். இவர் ஒருத்தரிடம் மட்டுமே நிறைய திறமைகள் இருக்கிறது என்று புகழ்ந்து ட்விட் செய்துள்ளார்.



மேகா ஆகாஷ் நடிப்பில், ‘ஒரு பக்க கதை’, ‘பூமராங்’,  ஆகிய படங்கள் உருவாகியுள்ளது. மேலும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினியுடன் நடித்து வருகிறார்.
Tags:    

Similar News