சினிமா

உங்களது வார்த்தைகள் எனக்கு செருப்படி மாதிரி இருந்தது - விஜய் சேதுபதி

Published On 2018-08-27 08:00 GMT   |   Update On 2018-08-27 08:20 GMT
லெனின் பாரதி இயக்கத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வரும் `மேற்குத் தொடர்ச்சி மலை' படத்திற்கு நீங்கள் அளித்த விமர்சனம் எனக்கு செருப்படி மாதிரி இருப்பதாக விஜய் சேதுபதி பேசினார். #MerkuThodarchiMalai
விஜய்சேதுபதி தயாரிப்பில் முற்றிலும் புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி வெளியாகி இருக்கும் படம் மேற்குத் தொடர்ச்சி மலை. மலைவாழ் மூட்டை தூக்கும் தொழிலாளிகளின் வாழ்வியலை இயல்பாக கூறி இருக்கும் இந்த படத்துக்கு நல்ல விமர்சனங்கள் கிடைத்துள்ளன.

இதற்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜய்சேதுபதி, ‘இந்த படத்தை இயக்குனர் லெனின் பாரதிக்காக தயாரிக்க சம்மதித்தேன். படத்தை பார்த்தபோது எனக்கு திருப்தியை தரவில்லை. படத்துக்கு செலவழித்த தொகை வந்தால் போதும் என்று நினைத்தேன். வாங்க யாரும் முன்வரவில்லை. சில லட்சங்கள் நஷ்டத்தில் வெளியிடலாமா என்றும் முயற்சித்தேன். முடியவில்லை. அந்த சூழலில் தான் சரவணன் வந்து ரிலீஸ் செய்து கொடுத்தார். எனக்கு கிடைக்கும் பாராட்டு அத்தனையும் லெனின் பாரதியையே சேரும்.



பத்திரிகையாளர்கள் பாராட்டிய பிறகு தான், எனக்கே படத்தின் அருமை புரிய தொடங்கியது. இங்கே நல்ல படங்களை எடுத்து வெளியிடுவது என்பது மிகவும் சிரமமான ஒன்று. இந்த படத்துக்கும் அந்த சிரமங்களை அனுபவித்தோம். என் படங்களை விமர்சிக்கும்போது எனக்கு கோபம் வந்து இருக்கிறது. இப்போது தான் எனக்கு விமர்சனம் பற்றிய புரிதல் ஏற்படுகிறது. நீங்கள் ரசித்து கொண்டாடுகிறீர்கள், பெரிய பெரிய வார்த்தைகளால் மனதை குளிர்விக்கிறீர்கள். அது எனக்கு ஒரு பெரிய செருப்படி மாதிரி இருந்தது. எனக்கு பாடம் புகட்டிய அனைவருக்கும் நன்றி.



இது எனக்கு பெரிய பாடம். தொடர்ந்து தயாரிப்பீர்களா? என்றால் அதை நாம் கேட்கும் கதை தான் முடிவு செய்யும். ஒரு கதை நம்மை தயாரிக்க தூண்ட வேண்டும். அப்படி ஒரு தூண்டுதல் ஏற்பட்டால் தயாரிப்பேன். படத்தில் நடித்த ஆண்டனி பெரிய திறமைசாலி. என்னைவிட உயரத்துக்கு செல்வார் என்று பேசினார். #MerkuThodarchiMalai #VijaySethupathi

விஜய் சேதுபதி பேசிய வீடியோவை பார்க்க:

Tags:    

Similar News