சினிமா

டார்ச் லைட் படத்திற்கு போராடி சென்சார் பெற்றேன் - இயக்குநர் மஜீத் வேதனை

Published On 2018-07-17 05:40 GMT   |   Update On 2018-07-17 05:40 GMT
மஜீத் இயக்கத்தில் சதா - ரித்விகா நடிப்பில் உருவாகி இருக்கும் `டார்ச் லைட்' படத்திற்கு போராடி சென்சார் சான்றிதழ் பெற்றதாக படத்தின் இயக்குநர் தெரிவித்துள்ளார். #TorchLight #Sadha
விஜய் நடித்த தமிழன் படத்தை இயக்கிய மஜீத் அடுத்ததாக இயக்கியிருக்கும் படம் `டார்ச் லைட்'. சதா, ரித்விகா, புதுமுகம் உதயா, தினேஷ் குமார், இயக்குநர் வெங்கடேஷ், சுஜாதா, ரங்கநாதன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் பற்றி இயக்குநர் மஜீத் பேசும்போது, 

" இது ஒரு பீரியட் படம். 90-களில் நடக்கும் கதையாக இந்தப் படம் உருவாகியிருக்கிறது. நெடுஞ்சாலைகளில் டார்ச் லைட் அடித்து பாலியல் தொழில் செய்யும் பெண்கள்  பற்றிய கதை. இந்தப் படத்தின் கதையைக் கேட்ட நடிகைகள் பலரும் நடிக்கத் தயங்கினார்கள்.  ஆனால் நடிகை சதா தைரியமாக நடிக்கச் சம்மதித்தார். வறுமையைப் பயன்படுத்தி பெண்ணினத்தை இந்தச் சமூகம் எப்படிப் படுகுழியில் தள்ளி அவர்களின் வாழ்க்கையைப் பாழாக்குகிறது என்பதை சொல்ல வேண்டும் என்று நினைத்தேன். 



இந்தக் கதை சார்ந்து பலர் உண்மைச் சாட்சியங்களாக உள்ளனர். அப்படிப்பட்ட பலரையும் சந்தித்து வீடியோவில் பேசி, பதிவு செய்து படமாக்கினேன். படத்தை தணிக்கைக் குழுவுக்கு அனுப்பினேன். ஆனால் இங்கு படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தார்கள். போராடிப் பார்த்து வேறு வழியில்லாமல் மும்பை சென்று `ஏ' சான்றிதழ் பெற்றுள்ளேன். கதைக்கு என்ன தேவையோ அதை மட்டுமே படமாக்கி உள்ளேன். படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும். " என்றார்.

சக்திவேல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஜேவி இசையமைத்திருக்கிறார். படம் விரைவில் திரைக்க வர இருக்கிறது. #TorchLight #Sadha

Tags:    

Similar News