சினிமா

பட அதிபர் பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஸ்வரா பாஸ்கர் புகார்

Published On 2018-07-02 22:04 IST   |   Update On 2018-07-02 22:04:00 IST
பட உலகில் வாய்ப்பு கேட்கும் நடிகைகளை இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் படுக்கைக்கு அழைப்பதாக புகார்கள் கிளம்பி வரும் நிலையில், நடிகை சுவரா பாஸ்கரும் புகார் கூறியுள்ளார். #SwaraBhaskar
தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி செக்ஸ் தொல்லை கொடுத்தவர்கள் பெயர்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார். மலையாள பட உலகிலும் பாலியல் தொல்லைகள் இருப்பதாக அங்குள்ள நடிகைகள் குற்றம்சாட்டி உள்ளனர். 

இந்தி நடிகைகளும் பாலியல் தொல்லை குறித்து பேச ஆரம்பித்துள்ளனர். தனுசுடன் ‘ராஞ்சனா’ இந்தி படத்தில் நடித்த ஸ்வரா பாஸ்கரும் தனக்கு தயாரிப்பாளர் ஒருவரால் பாலியல் தொல்லை ஏற்பட்டதாக புகார் கூறியுள்ளார். ராஞ்சனா படம் தமிழில் அம்பிகாபதி என்ற பெயரில் வந்தது. இந்தி பட உலகில் வளரும் கதாநாயகியாக அவர் இருக்கிறார்.

இதுகுறித்து பாஸ்கர் பாஸ்கர் கூறியதாவது:-

‘‘பட உலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் இருக்கிறது. எனக்கும் அந்த அனுபவம் ஏற்பட்டது. பெரிய தயாரிப்பாளர் ஒருவர் என்னிடம் தவறாக நடக்க முயன்றார். எனக்கு முத்தமிடவும் முயற்சித்தார். நான் அதை அனுமதிக்கவில்லை. திரையுலகில் இதுமாதிரி செக்ஸ் தொல்லைகள் இருக்கும் என்று முன்பே எனக்கு தெரியும் என்பதால் எச்சரிக்கையாக இருக்கிறேன். 



ஆண்களுக்கு இணையாக பெண்களை நடத்த வேண்டும். நடிகைகள் விருப்பம் என்ன என்பதை கேட்ட பிறகே அவர்களை அணுக வேண்டும். விருப்பம் இல்லாதவர்களை தொந்தரவு செய்யக்கூடாது’’

இவ்வாறு ஸ்வரா பாஸ்கர் கூறினார்.
Tags:    

Similar News