சினிமா

தோல்வியை கண்டு தளரமாட்டேன் - நிக்கி கல்ராணி

Published On 2018-06-07 15:20 IST   |   Update On 2018-06-07 15:20:00 IST
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நாயகிகளுள் ஒருவரான நிக்கி கல்ராணி, தனது படங்கள் தோல்வி அடைந்தால் மனதை தளர விடுவதில்லை என்று கூறியிருக்கிறார். #NikkiGalrani
டார்லிங் படம் மூலம் அறிமுகம் ஆன நிக்கி கல்ராணி இளம் நாயகர்களின் ஜோடியாக தேர்வாகி வருறார். நிக்கி நடித்து வெளியான நெருப்புடா, பக்கா, மொட்ட சிவா கெட்ட சிவா போன்ற படங்கள் தோல்வியையே சந்தித்தன. இதுகுறித்து நிக்கி கல்ராணியிடம் கேட்ட போது, 

’’வெற்றி பெறும் என்று நம்பியே 100 சதவீத உழைப்பைக் கொடுக்கிறோம். அதற்கு சரியான பலன் இல்லாதபோது சோகமாகத்தான் இருக்கும். நாடு முழுக்க வருடத்துக்கு 500-க்கும் மேற்பட்ட படங்கள் வருகிறது. அதில் நமது படமும் ஒன்று. நல்ல இடத்தை பிடிக்கவேண்டும் என்றுதான் ஓடுகிறோம். சமயத்தில் அது தவறிவிடும். 



அதற்காக மனதை தளர விடுவதில்லை. அடுத்த படம் நன்றாக அமையும் என்ற நம்பிக்கையுடன் மீண்டும் பணியைத் தொடங்கிடுவேன்’’ என்று பதில் அளித்து இருக்கிறார். #NikkiGalrani

Tags:    

Similar News