சினிமா

இளமையின் ரகசியம் பற்றி மனம்திறந்த நதியா

Published On 2018-05-24 15:05 IST   |   Update On 2018-05-24 15:05:00 IST
தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கொடிக்கட்டிப் பறந்த நாயகிகளுள் ஒருவரான நதியா, தன் இளமையின் ரகசியம் பற்றி மனம் திறந்து பேசினார். #Nathiya
அறிமுகமானதில் இருந்து அதே இளமையுடனும் உற்சாகத்துடனும் நடித்துவருபவர் நடிகை நதியா. இது குறித்து கேட்டோம். ‘இது எனது பெற்றோரின் மரபணுவில் இருந்து வந்து இருக்கலாம். நான் எதிலும் ஒரு ஒழுங்கை கடைபிடிப்பவள். உடற்பயிற்சி, சரியான நேரத்தில் உணவு, தூக்கம், எல்லோரையும் நேர்மறையாக அணுகுவது இதுதான் காரணம். நேர்மறையான எண்ணங்கள் நம்மை இளமையாக வைத்துக்கொள்ளும்.

நதியா ஜிமிக்கி, நதியா வளையல், நதியா கம்மல் இதெல்லாம் நினைவிருக்கிறதா?

எப்படி மறக்க முடியும்? அது கடவுள் கொடுத்த பரிசு. எனக்கு கிடைத்த எல்லாமே நான் எதிர்பார்க்காமல் வந்தவை. 18 வயதில் பிரபலமானதாலும், மும்பையில் வசித்ததாலும் அதுபற்றிய புரிதலோ பக்குவமோ இல்லை. மும்பையில் ஒரு சாதாரண பெண்ணாகவே இருப்பேன். கதாநாயகியாக நான்கு ஆண்டுகள் தான் நடித்தேன். ஆனால் அதன்பின்னும் கூட என்னை சந்திக்கும் மக்கள் என்னை பற்றி சிலாகித்து பேசுவார்கள். நான் அணிந்தவை எதுவுமே விலை மதிப்பானவை கிடையாது. மிகவும் மலிவாக தெருவோரங்களில் கிடைக்கும் அணிகலன்களைத் தான் அணிந்தேன். எளிமையாக இருந்ததால் தான் மக்களுக்கு அது பிடித்து போனது. நமக்கு ஒருவரை பிடித்தால் அவர் செய்பவை, அணிபவை எல்லாமே பிடித்து போகும். இது உளவியல். இப்போது அந்த காலம் மாறிவிட்டது. இனிமேல் அந்த கவர்ச்சி தோன்றாது. இப்போது தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. எல்லா புது மாடல்களுமே விரல் நுனிக்கு வந்துவிட்டன. எனவே நடிகைகளை பார்த்து உடை அணியும் வழக்கம் இல்லை.



இப்போது கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் வருகின்றன. நீங்கள் அறிமுகமான பூவே பூச்சூடவா படமே அப்படிப்பட்டது தானே?

இயக்குனர் பாசில் எங்கள் குடும்ப நண்பர். அந்த படத்துக்கு புதுமுக நடிகை தேடியபோது நான் அந்த வேடத்துக்கு பொருத்தமாக இருப்பேன் என்று தோன்றியதால் என்னை தேர்வு செய்தார்கள்.

இப்போதுள்ள நடிகைகளில் எந்த நடிகை பிடிக்கும்?

ஒருவரை மட்டும் சொல்வது கடினம். நிறைய நடிகைகள் வருகிறார்கள். எல்லோருமே அவரவருக்கான வேலையை சரியாக செய்கிறார்கள்.

குடும்பம் பற்றி? நான் என் குடும்பத்துக்கு அதிக முக்கியத்துவம் தருவேன். பெரிய மகள் ‌ஷனம் முதுகலை அரசியல் அறிவியலும், சின்ன மகள் ஜனா 11 ஆம் வகுப்பும் படிக்கிறார்கள். இருவருமே அமெரிக்காவில் இருக்கிறார்கள். நான் மும்பை பெண். ஆனால் எனக்கு அதிக அன்பு கிடைத்தது தென் இந்திய மொழிகளில் தான். #Nathiya
Tags:    

Similar News